முதலமைச்சர் ஜெயலலிதா நாளை கோடநாடு பயணம்

செவ்வாய், 13 அக்டோபர் 2015 (14:48 IST)
தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா நாளை கோடநாடு செல்கிறார். தற்போது இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில் இன்று அமைச்சர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.

 
கடந்த மாதம் 30 ஆம் தேதி சிறுதாவூர் சென்றிருந்த முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 10ஆம் தேதி மாலை போயஸ் கார்டன் திரும்பினார். பின்னர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர், நேற்று தலைமைச்செயலகத்தில் 440 புதிய பஸ்கள் வழங்கும் நிகழ்ச்சியில் கொடியசைத்து தொடங்கி வைத்ததோடு, பல்வேறு திட்டங்களையும் தொடங்கி வைத்தார்.

இந்த நிலையில் நாளை அவர் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கொடநாடு செல்வதால் இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது அப்போது முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கொட நாட்டில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

முதலமைச்சர் ஜெயலலிதா காலை 11 மணிக்கு சென்னையிலிருந்து கோவை சென்று பின்னர் கோட நாடு செல்கிறார். அப்போழுது, அங்கு உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து தொண்டர்களை சந்திக்கிறார். அதற்கு முன்பு இன்று மாலை அமைச்சர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்துகிறார். அப்பொழுது வருகின்ற சட்டமன்றத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிமுக முக்கிய நிர்வாகிகளின் பணிகள், மற்றும் புதிய திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்துவார் என்று கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்