சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் தொடங்கியது

புதன், 9 செப்டம்பர் 2015 (11:29 IST)
சென்னையில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடங்கி வைத்தார்.இந்த மாநாட்டில் ரூபாய் 1லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகள் முதலமைச்சர் முன்னிலையில் உறுதி செய்யபடுகின்றன.
 
மத்திய அமைச்சர்கள்  பொன்.ராதாகிருஷ்ணன், நிர்மலா சீத்தாராமன் ஆகியோர் இந்த மாநாட்டில் கலந்துக் கொண்டனர். இந்த மாநாட்டில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கான  சின்னம் அறிமுகம் செய்யப்பட்டது. உலகம் முழுவதும் இருந்து 400 பிரதிநிதிகள் கலந்துக கொணடனர். மேலும் இந்தியாவில் முன்னணி தொழில் அதிபர்களும் கலந்து கொண்டனர்.
 
இவர்களுடன் சர்வதேச முதலீட்டாளர்களான ஆஸ்திரேலியா,கனடா,பிரான்ஸ்,இத்தாலி,ஜப்பான், கொரியா,ரஷியா,சிங்கப்பூர்,இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தொழில் அதிபர்கள், பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்