கனமழையால் காய்கறிகளின் விலை கிடு கிடு உயர்வு

ஞாயிறு, 15 நவம்பர் 2015 (14:23 IST)
சென்னை மற்றும் புறநகரில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இந்த மழை மேலும் 3 நாட்கள் நீடிக்கும் என்பதால் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை உச்சத்தில் உள்ளது.


 
 
கோயம்பேடு மார்க்கெட்டில் இன்றைய வெங்காயத்தின் விலை கிலோ ஒன்றுக்கு 40 ரூபாயில் இருந்து 60 ரூபாய் வரையும், தக்காளியின் விலை 60 ரூபாயில் இருந்து 75 ரூபாயாகவும் தற்போது உயர்ந்துள்ளது.
 
இதனை தொடர்ந்து, வெண்டைக்காய், அவரைக்காய், உள்ளிட்டவைகள் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளன. தொடர் மழையின் காரணமாக வெளிமாநிலங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளதால், விலை உயர்ந்துள்ளதாக கோயம்பேடு காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். காய்கறிகளின் விலை உயர்வு மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்