சென்னை வடபழனி முருகர் கோயிலில் குடமுழுக்கு: தேதியை அறிவித்த அமைச்சர்

வெள்ளி, 10 டிசம்பர் 2021 (19:17 IST)
சென்னை வடபழனி முருகர் கோயிலில் குடமுழுக்கு: தேதியை அறிவித்த அமைச்சர்
சென்னை வடபழனி முருகர் கோவிலுக்கு குடமுழுக்கு விழா நடைபெறும் தேதியை இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் சற்றுமுன் அறிவித்துள்ளார். 
 
சென்னை வடபழனி கோவிலுக்கு கடந்த 2007ஆம் ஆண்டு குடமுழுக்கு விழா நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின் கடந்த 14 ஆண்டுகளாக அந்த கோயிலுக்கு குடமுழுக்கு விழா நடைபெறவில்லை
 
இந்த நிலையில் அடுத்த ஆண்டு அதாவது 2022ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் தேதி சென்னை வடபழனி முருகர் கோவிலுக்கு குடமுழுக்கு விழா நடைபெற உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பேட்டியளித்துள்ளார் 
 
இன்று வடபழனி முருகன் கோயிலை ஆய்வு செய்தபின் அவர் இந்த தகவலை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது முற்றுபுள்ளி
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்