பஸ் நிலையத்தில் கத்தியுடன் சுற்றிய மாணவர்கள்!

சனி, 30 ஜூலை 2016 (09:58 IST)
சென்னையில் புதுவண்ணாரப்பேட்டை டோல்கேட் பஸ்நிலையத்தில் மாணவர்கள் கத்தியுடன் சுற்றியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறை வந்து அவர்களை முன்கூட்டியே கைது செய்ததால் மாணவர்கள் மோதல் தடுக்கப்பட்டது.


 
 
நேற்று காலை புதுவண்ணாரப்பேட்டை டோல்கேட் பஸ் நிலையத்தில் 20 கல்லூரி மாணவர்கள் கூட்டமாக நின்றனர். அந்த மாணவர்கள் ஆவசமாகவும், சிலர் கையில் கத்தியுடனும் இருந்ததால் பயணிகள் பீதியடைந்து அலறியடித்து ஓடினார்.
 
மாணவர்கள் பஸ் நிலையத்தில் கையில் கத்தியுடன் அங்கும் இங்குமாக சுற்றியதால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது. அப்போது பஸ் நிலையத்துக்கு போலீசார் வந்ததும் மாணவர்கள் கலைந்து ஓடினார்.
 
அவர்களை போலீசார் விரட்டினர். 6 மாணவர்கள் போலீசாரிடம் சிக்கினர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அந்த மாணவர்களுக்கும், அப்பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கும் முன் விரோதம் இருந்துள்ளது.
 
இதனால் அந்த மாணவர்களை தாக்க பஸ் நிலையத்துக்கு கத்தியுடன் வந்தது தெரியவந்தது. காவல்துறை உரிய நேரத்தில் அங்கு வந்ததால் மாணவர்கள் மோதல் தவிர்க்கப்பட்டது.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்