ஜல்லிக்கட்டு போராட்டம்: கரை ஒதுங்கிய மாணவனின் சடலம்; யார் காரணம்??

சனி, 28 ஜனவரி 2017 (13:00 IST)
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்ட பள்ளி மாணவன் ஒருவர் கடலில் முழ்கி பாலியான சம்பவம் தற்பொழுது வெளியாகி உள்ளது.


 
 
சென்னை அம்பத்தூர் மேம்பேடுவை சேர்ந்தவர் கல்யாண ராமன். இவருடைய மகன் மணிகண்டன். மணிகண்டன் 11 ஆம் வகுப்பு படித்து வந்தார். சென்னை மெரினாவில் நடைப்பெற்ற போரட்டத்தில் மணிகண்டன் கலந்து கொண்டார். 
 
கடந்த 22-ம் தேதி மெரினாவில் நடைப்பெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட மணிகண்டன் கானத்தூர் கடலில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். போராட்டத்தில் கலந்து கொண்ட மணிகண்டனின் கடலில் முழ்கி உயிர் இழந்தது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. 
 
இதை அறிந்த ராகவா லாரன்ஸ் பலியான மாணவனின் இல்லத்திற்கு நேரடியாக சென்று அந்த மாணவனின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கியதாக சமூகவலைதளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது.
 
போராட்டத்தில் ஈடுப்பட்ட மாணவன் சடலமாக கரை ஒதுங்கியது எப்படி? என்ற கேள்விக்கு காவல்துறை தான் பதிலளிக்க வேண்டும் என்றும், இதற்கு காவல்துறை தான் பொறுப்பு என சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்