சிங்கார சென்னை 2.0 திட்டம்: 362 சாலைகள் சீரமைப்பு பணிகள் தொடக்கம்!

செவ்வாய், 28 பிப்ரவரி 2023 (13:47 IST)
சிங்காரச் சென்னை 2.0  என்ற திட்டத்தின் கீழ் சென்னையில் உள்ள 362 சாலைகளை சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிங்கார சென்னை 2.0  என்ற திட்டத்தின் கீழ் சென்னையில் உள்ள அனைத்து சாலைகளையும் சர்வதேச தரத்திற்கு மாற்ற வேண்டும் என சமீபத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் முதல் கட்டமாக சென்னையில் உள்ள 362 சாலைகளை சீரமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. குறிப்பாக திருவொற்றியூர் மணலி ராயபுரம் வளசரவாக்கம் அடையார் பெருங்குடி ஆகிய பகுதிகளில் உள்ள 362 சாலைகள் சீரமைக்கப்படும் 
 
இதனை அடுத்து அடுத்தகட்டமாக 568 சாலைகளை சீரமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. 
 
சிங்கார சென்னை 2.0  ட்டம் முடிவடைந்த பின்னர் சென்னையில் உள்ள சாலை முழுவதும் சர்வதேச தரத்தில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்