தமிழகம், புதுச்சேரி: புயல் மற்றும் மழை தகவல் உடனுக்குடன்!

வியாழன், 1 டிசம்பர் 2016 (13:34 IST)
* நாடா புயல் காரணமாக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெற இருந்த தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார்.

* நாடா புயல் புதுச்சேரி அருகே 210 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளதால் புதுச்சேரிக்கு தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு படையின் இரு அணிகள் அனுப்பப்பட்டுள்ளது.
 
* நாடா புயல் காரணமாக கடலூரில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக கடலூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
 
* புயல் வலுவிழந்துள்ளதால் தமிழகத்தில் மிதமான மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

* படிப்படியாக வலுவிழந்த நாடா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
* கடலூர் துறைமுகத்தில் 7-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

* புதுச்சேரி துறைமுகத்தில் 6-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

* நாகை துறைமுகத்தில் 5-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
 
* நாடா புயல் இன்று இரவு கரையை கடக்கும். கடலூர் மாவட்டத்தில் அதிகம் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
 
* நாடா புயல் கடலூரில் இருந்து 290 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது.

* சென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
 
* கோடியக்கரையில் புயல் எச்சரிக்கையை மீறியும் கடலுக்குள் சென்ற 35 படகுகளில் 17 மட்டுமே கரை திரும்பியுள்ளது.
 
* சென்னை முகப்பேர் மேற்குப் பகுதியில் முன்னெச்சரிக்கையாக, மீட்புப் படகுகள் தரையிறக்கப்பட்டுள்ளது.
 
* தேவையான உணவுப்பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன, தொலைத்தொடர்பு சேவைகள் எந்தவித தடையுமின்றி செயல்படும் என வருவாய்த்துறை அமைச்சர் தகவல்.
 
* கடலூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் கடல் மிகுந்த சீற்றத்துடன் காணப்படுகிறது.
 
* அரக்கோணத்தில் இருந்து சென்னைக்கு தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் 40 பேர், 4 மிதவை மீட்புப் படகுகளுடன் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
 
* சென்னையில் சாலைகள், சுரங்கப் பாதைகளில் தேங்கும் மழை நீரை வெளியேற்ற இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
 
* சென்னை மெரினா, பட்டினம்பாக்கம், பெசண்ட் நகர் மற்றும் திருவொற்றியூர் பகுதிகளில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது.
 
* சென்னையில் நுங்கம்பாக்கம், தி-நகர், கிண்டி, வடபழனி, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், ராயப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
 
* புதுச்சேரிக்கு புயல் உதவி எண்கள் அறிவிப்பு: 1070, 1077 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
 
* சென்னை மெரினா கடற்கரையில் 10 அடி உயரம் வரை கடல் அலைகள் சீறுவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
 
* நாடா புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அடுத்த 12 மணி நேரத்தில் மாறும் என தகவல்.
 
* சென்னையில் விட்டு விட்டு மழை பெய்யும் எனவும் பலமான தரைக்காற்று வீசும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
 
* கடல் சீற்றம் அதிகமாக இருப்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
* நாடா புயல் இன்று நள்ளிரவு கரையை கடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
* காவிரி டெல்டா மாவட்டங்களில் பேரிடர் மீட்பு குழு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
 
* தஞ்சை, திருவாரூர், நாகை, திருச்சி, புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
 
* நாடா புயலை எதிர் கொள்ள மாநகராட்சி தயாராக இருப்பதாக சென்னை மாநகராட்சி கூறியுள்ளது.
 
* சென்னை, புதுச்சேரி மற்றும் காவிரி டெல்டா பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
 
* தமிழகத்தில் இருந்து 350 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது நாடா புயல்.
 
* தமிழகம் மற்றும் புதிச்சேரியில் இன்றும் நாளையும் பரவலாக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்