தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்குப் பட்டாசு வெடிக்கும் நேரமாக காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையிலும் தமிழக அரசு அனுமதியளித்திருந்தது. ஆனாலும் அந்த விதிகளை யாரும் பின்பற்றவில்லை. இதையடுத்து விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாகக் கூறி மொத்தமாக 115 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்குகளில் இவர்களின் விதிமீறலின் தன்மையைப் பொறுத்து 6 மாத சிறைத் தண்டனை அல்லது 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இந்த வழக்கில் 700 பேர் வரைக் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.