தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்!

திங்கள், 28 பிப்ரவரி 2022 (18:10 IST)
தமிழகத்திற்கு சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் அறிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
தென்கிழக்கு வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதால் வரும் மார்ச் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் பல மாவட்டங்களுக்கு ஆரஞ்சு கலர் எச்சரிக்கையை விடுத்துள்ளது 
 
மார்ச் 3ஆம் தேதி தஞ்சை திருவாரூர் மயிலாடுதுறை நாகை கடலூர் ராமநாதபுரம் புதுக்கோட்டை கள்ளக்குறிச்சி அரியலூர் பெரம்பலூர் சிவகங்கை ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும்
 
அதேபோல் மார்ச் 4-ஆம் தேதி காஞ்சிபுரம் செங்கல்பட்டு கடலூர் விழுப்புரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மழைக்கு வாய்ப்பு இல்லை என்று கூறப்பட்டுள்ளது 
 
கனமழை அதிகம் உள்ள மாவட்டங்களுக்கு மட்டும் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்