தமிழ்நாட்டில் வரும் நாட்களில் வெப்பம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Webdunia
புதன், 22 பிப்ரவரி 2023 (14:52 IST)
தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களில் வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
 
 மழைக்காலம் குளிர் காலம் முடிவடைந்து கோடைகாலம் தொடங்க இருப்பதை அடுத்து தற்போது பல பகுதிகளில் அதிக வெயில் அடித்து வருகிறது. இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் சற்று முன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் கலந்து சில நாட்களாக வறண்ட வானிலை நிலவி வருகிறது என்றும் வரும் நாட்களில் இன்னும் அதிக வெப்பம் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. 
 
அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 டிகிரி முதல் மூன்று டிகிரி வரை அதிகரிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து இந்த ஆண்டு கோடை வெப்பத்தை  நினைத்து பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்