ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

Webdunia
வெள்ளி, 11 செப்டம்பர் 2020 (11:54 IST)
இசைப்புயல் ஏஆர் ரஹ்மானுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏஆர் ரஹ்மான் வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரை அடுத்து வருமான வரித்துறை சமீபத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் இது குறித்து விளக்கம் அளிக்குமாறு ஏ ஆர் ரஹ்மானுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது
 
முன்னதாக வெளிநாட்டிலிருந்து பெறப்பட்ட பெரிய தொகைக்கு உரிய வரி செலுத்தாமல் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் வரி ஏய்ப்பு செய்வதாக வருமான வரித்துறை குற்றம் சாட்டியது. ஏ.ஆர் ரஹ்மானுக்கு சொந்தமான ட்ரஸ்டுக்கு வெளிநாட்டிலிருந்து பணம் பெறுவதற்கான அனுமதி அளிக்கப்படவில்லை என்ற போதிலும் அந்த ட்ரெஸ்டின் அக்கவுண்டில் பெருமளவு பணம் செலுத்தப்பட்டுள்ளது என்றும், இதற்கு உரிய வரி செலுத்தவில்லை என்றும் வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது 
 
ஆனால் இதுகுறித்து ஏ.ஆர்.ரஹ்மான் தரப்பில் விளக்கம் கூறிய போது இந்த பணம் தொடர்பாக 50 சதவீத வரி ஏற்கனவே செலுத்தப்பட்டு விட்டது என்றும் பிக்சட் டெபாசிட்டில் உள்ள அந்த பணம் குறித்த ஆவணங்களை வருமான பிரிவினர் ஏற்கனவே ஆய்வு செய்து விட்டனர் என்றும் நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் அவர்கள் தற்போது ஏன் பிரச்சனை ஆக்குகிறார்கள் என்று தெரியவில்லை என்றும் ஏஆர் ரஹ்மான் தரப்பினர் தெரிவித்தனர்
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்