சென்னையில் ஓடும் பேருந்தில் டிரைவருக்கு மாரடைப்பு: பெரும் விபத்து தவிர்ப்பு

வியாழன், 11 பிப்ரவரி 2016 (15:07 IST)
நெஞ்சுவலி ஏற்பட்டதை உணர்ந்த அரசு பேருந்து ஒட்டுனர், உடனடியாக பேருந்தை சாலையோரம் நிறுத்திவிட்டு அருகில் இருந்த மருத்துமனைக்கு நடந்து சென்றபோது வழியிலேயே மரணம் அடைந்தார்.
 
சென்னை, கோயம்பேட்டியில் இருந்து காஞ்சீபுரம் நோக்கி சென்று கொண்டு இருந்த அரசு விரைவி பேருந்து, மதுரவாயல் அருகே பேருந்து சென்று கொண்டு இருந்த போது திடீரென பேருந்து ஓட்டுனருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. தனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை உணர்ந்த அவர், பேருந்தை பாதுகாப்பாக சாலையோரம் நிறுத்திவிட்டு கிழே இறங்கினார். அப்போது அந்த பேருந்தில் 50 மேற்பட்ட பயணிகள் இருந்தனர். அந்த பயணிகளை நடத்துனர் மாற்று பேருந்தில் அனுப்பி வைத்தார்.
 
பின்னர், அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு நடத்துனருடன் நடந்து சென்றார். சிறிது நேரத்தில் ஆஸ்பத்திரி வளாகத்திலேயே ஓட்டுனர் மயங்கி கிழே விழுந்தார். அந்த மருத்துவமனையில் இருந்த டாக்டர்கள் உடனடியாக அவரை பரிசோதித்த போது மாரடைப்பால் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அவருடைய உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், இச்சம்பவம் குறித்து மதுரவாயல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
பேருந்து சென்று கொண்டிருந்த போது அவர் உயிரிழந்து இருந்தால் பேருந்து பெரும் விபத்துக்குள்ளாகி இருக்கும். மேலும், உயிர் போகும் நிலையில் 50 மேற்பட்ட பயணிகளை காப்பற்றிய பேருந்து ஓட்டுனரை நினைத்து சக உழியர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்