மது அருந்தி திரும்பும்போது பாலியல் தொல்லை; ஆண் நண்பர்களை ரோட்டில் விட்டு அடித்த பெண்!

புதன், 24 நவம்பர் 2021 (16:35 IST)
சென்னையில் மது அருந்தி விட்டு திரும்பும்போது பாலியல் தொல்லை தந்த நண்பர்களை பெண் ஒருவர் சாலையில் வைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை நுங்கம்பாக்கம் இலங்கை தூதரகம் அருகே அதிகாலை 3 மணியளவில் கார் ஒன்று சென்றபோது, காரிலிருந்த பெண் ஒருவர் தன்னை காப்பாற்றும்படி கூச்சலிட்டவாறே சென்றுள்ளார். இதனால் கார் நிறுத்தப்பட்டுள்ளது. காரிலிருந்து இறங்கிய பெண் தன்னுடன் வந்திருந்த சக ஆண் நண்பர்களை செருப்பால் அடிக்க தொடங்கியுள்ளார்.

அங்கு வந்த போலீஸார் மது போதையில் இருந்த அந்த பெண் உள்பட நால்வரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்துள்ளனர். விசாரணையில் பெண்ணும் மற்ற 3 நண்பர்களும் ஐடி துறையில் பணிபுரிபவர்கள் என்றும், நட்சத்திர விடுதி சென்று மது அருந்தி திரும்புகையில் ஆண் நண்பர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதால் அவர்களை சாலையில் வைத்து அடித்ததும் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்