சென்னை: ரெயில் நிலையத்தில் அதிவேக வை-பை

வியாழன், 21 ஜூலை 2016 (14:11 IST)
சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் அதிவேக வை-பை சேவையை தொடங்க உள்ளனர்.


 
சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் அதிவேக 'வை-பை' சேவையை ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு 24-ந்தேதி தொடங்கி வைக்கிறார். மத்திய ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு 23-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் சுற்றுப்பயணம் செல்கிறார். அப்போது சென்னை, பெங்களூரு மற்றும் நெல்லூர் ஆகிய நகரங்களில் பல்வேறு ரெயில்வே திட்டங்களை தொடங்கி வைக்கிறார். அந்த வகையில், சுரேஷ் பிரபு 23-ந்தேதி இரவு 8.25 மணிக்கு சென்னை வருகிறார். 24-ந்தேதி காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள பல்வேறு ரெயில்வே திட்டங்களை தொடங்கி வைக்கிறார். 
 
அவர் தொடங்கி வைக்கும் திட்டங்கள்:
 
* சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் மேம்படுத்தப்பட்ட அதிவேக 'வை-பை' சேவை.
* 'ஆயூஷ்' திட்டத்தின்படி பெரம்பூர் ரெயில்வே மருத்துவமனையில் மரபு சார்ந்த மருத்துவ சேவை வசதிகள்.
* திருவள்ளூர்-திருவாலங்காடு இடையே 16.83 கி.மீ. தூரத்திலான 4-வது வழித்தடம்.
*நெல்லை ரெயில் நிலையத்தில் 1-வது நடைமேடை மற்றும் 2-3-வது நடைமேடை இடையே என 2 நகரும் படிக்கட்டுகள்.
* திருச்சி ரெயில் நிலையத்தில் அதிவேக 'வை-பை' வசதி.
*அரியலூர்-மாத்தூர் ரெயில் நிலையங்கள் இடையே 25 கி.மீ. தூரத்துக்கு மின்மயமாக்கப்பட்ட இரட்டை ரெயில்பாதை வழித்தடம்.
* சேலம் ரெயில் நிலையத்தில் 1-வது நடைமேடை மற்றும் 3-4-வது நடைமேடை இடையே என 2 நகரும் படிக் கட்டுகள்.
 
ஆகியவற்றை வீடியோ கான்பரன்சிங் மூலம் சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு தொடங்கி வைக்கிறார்.
 
இத்திட்டங்களை  தொடங்கி வைத்துவிட்டு, 24-ந்தேதி காலை 11.30 மணிக்கு  ஹெலிகாப்டர் மூலம் சுரேஷ் பிரபு நெல்லூர் புறப்பட்டு செல்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்