வெள்ள நிவாரண உதவி செய்ய முயன்ற சிவகார்த்திகேயன் : அலைக்கழித்த மாநகராட்சி

சனி, 21 நவம்பர் 2015 (18:25 IST)
நடிகர் சிவகார்த்திகேயன் வெள்ள நிவாரண உதவி செய்ய முயன்றதாகவும், ஆனால் சென்னை மாநகராட்சி அவரை அலைக்கழித்ததாகவும் தகவல் வெளியகியுள்ளது.


 
 
தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து, சினிமா நடிகராக மாறியவர் சிவகார்த்திகேயன். இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உண்டு. சமீபத்தில் பெய்த மழையில் சென்னையில் பட இடங்களில் மக்கள் பாதிக்கப்பட்டனர்.  சாலைகள் சேதமடைந்தது. குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. பல இடங்களில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
 
மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தமிழக அரசு சார்பாக,  முதலமைச்சர் ஜெயலலிதா ரூ.500 கோடி வெள்ள நிவாரண நிதியாக அறிவித்தார். ஆனால்  தமிழகத்தை சீரமைக்க இந்த நிதி போதாது என்று அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் நவ.19 ஆம் தேதி சென்னை மாநகராட்சி கமிஷனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு  “வெள்ள நிவாரண உதவி செய்ய வேண்டும். யாரை தொடர்பு கொள்வது ” என்று கேட்டுள்ளார்.
 
அவருக்கு சரியான பதிலை கூறாமல், அடுத்தடுத்த அதிகாரிகளிடம் பேசுங்கள் என்று அதிகாரிகளின் எண்ணை கூறி அலைக்கழித்துள்ளனர்.  அவரிடம் மட்டும் இல்லை. அவரைப் போல் பலர் நிவாரண உதவி செய்ய வேண்டும் என தொடர்பு கொள்ளும்போது, மாநகராட்சி ஊழியர்கள் அவர்களுக்கு சரியான பதிலை கூறாமல் அலைக்கழிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்