சென்ட்ரல் குண்டு வெடிப்பு வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்; முக்கிய தகவல் கிடைத்துள்ளது - டி.ஜி.பி. ராமானுஜம்

வீரமணி பன்னீர்செல்வம்

வியாழன், 1 மே 2014 (12:30 IST)
சென்னை சென்ட்ரல் குண்டு வெடிப்பு வழக்கு சி.பி.சி.ஐ.டி.யின் சிறப்பு புலனாய்வு குழுவுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், சம்பவம் குறித்து முக்கிய தகவல் கிடைத்துள்ளதாகவும் தமிழக காவல்துறை டி.ஜி.பி. ராமானுஜம் தெரிவித்துள்ளார்.
குண்டு வெடிப்பு நடந்த இடத்தை பார்வையிட்ட பிறகு அவர் செய்தியாளர்களுக்கு அளித்தார். அதில் அவர் கூறியதாவது:–
 
சாதாரண அளவில்தான் இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. மிகப்பெரிய குண்டு வெடிப்பு அல்ல. ரயிலில் மிகப்பெரிய சேதம் எதுவும் ஏற்படவில்லை. சென்னைக்கு இலக்கு இருப்பதாக கருதவில்லை. ஏனென்றால் ரயில் ஒருமணி நேரம் காலதாமதமாக வந்த பிறகே குண்டு வெடித்துள்ளது. இதனால் வேறு இடம் இலக்காக இருக்கலாம்.
இந்த குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து முக்கிய தகவல் கிடைத்துள்ளது. இந்த வழக்கை ரயில்வே போலீசார் விசாரித்து வந்தனர். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.யின் சிறப்பு புலனாய்வு குழுவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இவ்வாறு டி.ஜி.பி. ராமானுஜம் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்