காதல் தகராறில் வாலிபரை சரமாரியாக வெட்டிக் கொன்ற நண்பர்கள்

திங்கள், 18 ஆகஸ்ட் 2014 (11:10 IST)
செங்கல்பட்டை அடுத்த ஆத்தூரரில் காதல் தகராறு காரணமாக தனது நண்பரை சிலர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்னர்.

செங்கல்பட்டை அடுத்த ஆத்தூர், தென்பாதி பள்ளத்தெருவைச் சேர்ந்தவர் கோபால். இவரது மகன் 23 வயதுடைய மணிகண்டன். இவர் மீது தேமுதிக நகர செயலாளர் சுரேஷ் கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

இந்நிலையில் இரவு மணிகண்டன் நண்பர்கள் 2 பேருடன் மோட்டார் சைக்கிளில் திம்மாவரம்–காஞ்சீபுரம் நெடுஞ்சாலையில் சென்றார்.
அங்குள்ள ரைஸ்மில் அருகே வந்த போது திடீரென பைக்கில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் வழிமறித்தனர்.

அரிவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் நின்ற அவர்களை பார்த்ததும் மணிகண்டனுடன் வந்த 2 பேரும் ஓட்டம் பிடித்தனர்.
மணிகண்டனும் தப்பி ஓட முயன்றார். அவரை விரட்டிச் சென்ற கும்பல் ஓட, ஓட சரமாரியாக வெட்டினர்.

இதில் தலை, கழுத்து, மார்பு ஆகிய இங்களிர் அவருக்கு பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே மணிகண்டன் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். உடனே மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும், செங்கல்பட்டு தாலுக்கா காவல்துறை ஆய்வாளர் உள்ளிட்ட காவல்ர்கள் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் உயிருக்குப் போராடிய மணிகண்டனை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்

இதைத் தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மணிகண்டனை காதல் விவகாரத்தில் நண்பர்கள் திம்மாவரத்தை அடுத்த அண்ணா நகரை சேர்ந்த விஜி, திம்மாவரம் ஆனந்தன், ஆத்தூர் தென்பகுதியை சேர்ந்த காமராஜ் என்ற விடுதலை ஆகியோர் கொலை செய்தது தெரிந்தது.

அவர்களைப் பிடிக்க காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பழைய சீவரம் பகுதியில் பதுங்கி இருந்த விஜி உள்பட 3 பேரையும் தனிப்படை காவல்துறையினர் பிடித்தனர்.

கைதான விஜி காவல்துறையினரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:–

“நானும், மணிகண்டனும் நண்பர்கள். எனது உறவுப் பெண்ணை மணிகண்டன் காதலித்தார். இதை நான் கண்டித்து காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தேன். ஆனால் மணிகண்டன் எனது பேச்சை கேட்காமல் உறவுப் பெண்ணை சந்தித்து வந்தார். இது எனக்கு ஆந்திரத்தை ஏற்படுத்தியது.

நான் காதலுக்கு தடையாக இருந்ததால் என்னை தீர்த்து கட்ட மணிகண்டன் திட்டம் தீட்டினார். இது பற்றி எனக்கு தெரிந்தது. எனவே அவரை கொலை செய்ய முடிவு செய்தேன்.

இந்நிலையில் இது, தொடர்பாக எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது மிகவும் திமிராக மணிகண்டன் என்னிடம் பேசினார். இதையடுத்து நண்பர்களுடன் சேர்ந்து அவர் மோட்டார் சைக்கிளில் செல்வதை நோட்டமிட்டு வெட்டிக் கொன்றோம்.“ இவ்வாறு அவர் கூறி உள்ளார். மேலும் இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்