ரூ.570 கோடி பறிமுதல் குறித்து அறிக்கை தாக்கல் செய்த சிபிஐ

செவ்வாய், 4 ஜூலை 2017 (16:14 IST)
திருப்பூரில் கண்டெய்னர் லாரியில் சிக்கிய ரூ.570 கோடி பணம் குறித்த வழக்கில், பணம் வங்கிக்கு சொந்தமானது என சிபிஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளது.


 

 
2016 தமிழக சட்டசபை தேர்தலின் போது திருப்பூர் அருகே மூன்று கண்டெய்னர் லாரி பணத்துடன் சிக்கியது. அதில் 570 கோடி ரூபாய் பணம் இருந்தது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த பணம் யாருக்கு சொந்தமானது என பல கேள்விகள் எழுந்தது.
 
அதைத்தொடர்ந்து அந்த பணம் எஸ்.பி.ஐ வங்கிக்கு சொந்தமானது என தெரிவிக்கப்பட்டது. இருந்தும் பணத்தை கொண்டு சென்றவர்களிடம் முறையான ஆவணம் இல்லாததால் சந்தேகம் எழுந்தது. இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து சிபிஐ விசாரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 
 
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில் கண்டெய்னரில் இருந்த பணம் வங்கிக்கு சொந்தமானது என தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்