நிர்மலா தேவி விவகாரம் - சிபிசிஐடி விசாரணை இன்று தொடங்கியது

Webdunia
வியாழன், 19 ஏப்ரல் 2018 (10:23 IST)
கல்லூரி மாணவிகளிடம் தவறாக பேசிய பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் இன்று விசாரணையை துவக்கியுள்ளனர்.

 
மதுரை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் ஒரு தனியார் கல்லூரியில் பயிலும் 4 மாணவிகளிடம் தவறாக பேசிய பேராசிரியை நிர்மலா தேவியின் ஆடியோ சமீபத்தில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தற்போது நிர்மலா தேவி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது 3 பிரிவுகளின் கீழ்  வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு தற்போது சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை இன்று துவங்க உள்ளனர். இதன் தொடக்கமாக, சிபிசிஐடி எஸ்.பி. ராஜேஸ்வரி இன்று விருதுநகரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில், காவல் அதிகாரிகளுடன் இன்று காலை ஆலோசனையில் ஈடுபட்டார்.
 
முதல் கட்டமாக, நிர்மலா தேவி  பணியாற்றி வந்த தனியார் கல்லூரியின் நிர்வாகம், அங்கு பணிபுரிந்து வரும் பேராசிரியர்கள் ஆகியோரிடம் அவர் விசாரணை நடத்துவார் எனத் தெரிகிறது. அதன் பின், சந்தப்பட்ட மாணவிகளின் வீட்டிற்கு சென்று ராஜேஸ்வரி எஸ்.பி விசாரணை நடத்துவார் என செய்திகள் வெளிவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்