லெப்ட் ரைட் வாங்கிய கோர்ட்: ரஜினி மீதான வழக்குகளை வாபஸ் பெற்ற திக!!

வெள்ளி, 24 ஜனவரி 2020 (12:07 IST)
நடிகர் ரஜினிக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்களை வாபஸ் பெற்றது திராவிடர் விடுதலைக் கழகம். 
 
துக்ளக் 50வது ஆண்டு விழாவில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த் அந்நிகழ்வில் பெரியார் குறித்து அவதூறான கருத்துகளை பரப்பியதாக திராவிடர் விடுதலைக் கழகம் ரஜினி மீது சென்னை மற்றும் கோவை காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. 
 
இதனைத்தொடர்ந்து இந்த புகார்களை வழக்காக பதியக்கோரி மனு தொடரப்பட்டது. அதில், ரஜினி மீது நவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிடவும் என கோரப்பட்டிருந்தது. இந்த மனு இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. 
 
வழக்கை விசாரித்த நீதிபதி, புகார் கொடுத்த 15 நாட்கள் முடிவதற்குள் முன்னதாகவே நீதிமன்றத்தை அணுகியது ஏன்? புகார் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு கால அவகாசம் வழங்கிய பின் மேஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தை அணுகி இருக்க வேண்டும். இந்த மனுக்கள் விசாரணைக்கு பட்டியலிடபட்டதே தவறு என கூறியுள்ளார். 
 
இதனைத்தொடர்ந்து வேறு வழி இன்றி  திராவிடர் விடுதலைக் கழகம் ரஜினிக்கு எதிராக கொடுக்கப்பட்ட மனுக்களை வாபஸ் பெற்றனர். இதனையடுத்து வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்