18-க்கு முன் திருமணம் வேண்டானு சொல்லு; தடுத்து நில்லு: யூனிசெஃப் விழிப்புணர்வு பிரச்சாரம்!

செவ்வாய், 20 செப்டம்பர் 2016 (18:58 IST)
உலக அளவில் குழந்தைகள் நலனுக்காக குரல் கொடுத்து வரும் யூனிசெஃப் என்ற அமைப்பு குழந்தை திருமணத்திற்கு எதிராக தமிழகத்தில் வாகன பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது.


 
 
சமூக நலத்துறையும், யூனிசெஃப் அமைப்பும் சேர்ந்து இந்த குழந்தை திருமணத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரத்தை தமிழகத்தில் தொடங்கியுள்ளது. இந்த பிரச்சாரமானது தமிழகத்தில் மூன்று மாதங்கள் நடைபெற உள்ளது.
 
குழந்தை திருமணம் தமிழகத்தில் அதிகமாக நடக்கும் 13 மாவட்டங்களான வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இந்த விழிப்புணர்வு வாகன பிரச்சாரம் நடத்த உள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்