தமிழகம் முழுவதும் பேருந்துகள் ஓடுகிறது: இயல்பு நிலையும் திரும்பியது

புதன், 17 மே 2017 (05:00 IST)
கடந்த மூன்று நாட்களாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட வந்த போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்றிரவு பேச்சுவார்த்தை நடத்தினர். அமைச்சர்களுடன் நடத்திய இந்த பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்ததால் இன்று முதல் அனைத்து தொழிலாளர்களும் பணிக்கு திரும்பினர்



 


எனவே சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இன்று அதிகாலை முதலே வழக்கம்போல் பேருந்துகள் ஓடத்தொடங்கின. தமிழகம் முழுவதும் இயல்பு நிலை திரும்பியதை அடுத்து பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

முதல்கட்டமாக போக்குவரத்து ஊழியர்களின் நிலுவைத்தொகையை வழங்க ரூ.1000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதை அடுத்து இந்த போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளதாகவும், தங்களுடைய மற்ற கோரிக்கைகளையும் அரசு பரிசீலனை செய்யும் என்று தாங்கள் நம்புவதாகவும் தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்