செங்கல்பட்டுக்கு மீண்டும் அரசு பஸ் சேவையை சைதாப்பேட்டையில் துவங்கி வைத்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, பேருந்து கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை என கூறிய அவர், போக்குவரத்தை சீரமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறினார்.
ஒரு கிலோமீட்டர் பேருந்து இயக்கினால் 50 ரூபாய் நஷ்டம் அடைகிறது என்று தெரிவித்தது பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படடுத்தியது. இந்நிலையில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். மேலும், நிதிச்சுமையை பற்றி கவலைப்படவில்லை என்று கூறிய அவர் திமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை புதுப்பொலிவு பெறும் என்றும் பழைய பேருந்துகள் அகற்றப்பட்டு 2,500 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் என்றார்.