தேமுதிக கட்சியின் தலைவராகவும், நடிகராகவும் இருந்த விஜயகாந்த் மக்களிடையே நல்ல மனிதர் என்றும் அறியப்பட்டவர். யாரும் பசியோடு இருக்கக் கூடாது என்பதையும், எல்லாருக்கும் சரிசமமான உணவு வழங்கப்பட வேண்டும் என்பதையும் தனது வீட்டில் தொடங்கி படப்பிடிப்பு தளம் வரை தவறாது பின்பற்றியவர்.
வேர்வை சிந்திச் சேர்த்த காசு. சில பேரு மாதிரி ஊரை அடிச்சு, உலையில் போட்டுச் சம்பாதிச்சதில்ல. ஊழல் பண்ணிச் சேர்க்கலை. கடன்பட்டு, கஷ்டப்பட்டுக் கட்டி முடிச்ச மண்டபம். அது இன்னிக்குக் கண்ணெதிரே நொறுங்கும்போது மனசில் சுருக்குனு ஒரு வலி. அவ்வளவுதான்..!" என கூறியுள்ளார்.