புத்தர் மீது திடீர்ப்பாசம் கொண்ட பெரியார் அமைப்பினர்

திங்கள், 9 செப்டம்பர் 2019 (07:44 IST)
இந்துக்கள் ஒரு விழாவோ, பண்டிகையோ கொண்டாடினால் அது நாத்திக வாதிகளுக்கு சுத்தமாக பிடிக்காது. பகுத்தறிவு பேசும் இவர்கள் மற்ற மத திருவிழாக்களை இணைந்து கொண்டாடிவிட்டு இந்து மத திருவிழாக்களை மட்டும் விமர்சனம் செய்வதுண்டு. 
 
 
இந்த நிலையில் சமீபத்தில் இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில், நேற்று விநாயகர் சிலை கடலில் கரைக்கும் நிகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நூதன போராட்டம் ஒன்றை பெரியார் அமைப்பினர் நடத்தினர்.
 
 
விநாயகர் சிலை ஊர்வலகத்திற்கு மாற்றாக, திராவிடர் விடுதலை கழகம் சார்பில் நேற்று புத்தர் ஊர்வலம் நடத்தப்பட்டது. விநாயகர் சிலை ஊர்வலத்தால் பல இடங்களில் அமைதி குலைவதாக குற்றம்சாட்டிய அவர்கள், சமத்துவத்தை போதித்த புத்தர் சிலையை ஊர்வலமாக கொண்டு சென்றதாக தெரிவித்தனர். ஆனால் புத்தர் சிலை ஊர்வலத்தில் புத்தரை பற்றி முழக்கமிடாமல் விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு எதிராக அவர்கள் முழக்கமிட்டனர். தனையடுத்து அவ்வாறு விநாயகர் சிலைக்கு எதிராக முழக்கமிட்டவர்களை போலீசார் கைது செய்து அப்புறப்படுத்தினர்
 
 
கடவுள் மறுப்புக்கொள்கையை கடைபிடிப்பதாக கூறும் பகுத்தறிவுவாதிகள் இந்துமத கடவுள்களை விமர்சனம் செய்வது மட்டுமின்றி உலகின் பல நாடுகளில் வழிபடும் கடவுளாக உள்ள புத்தருக்கு ஊர்வலம் நடத்தி புத்தர் மீது திடீர்ப்பாசம் கொண்டது கேலிக்குரியதாக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்