குட்டி நாயை கொடூரமாக கொன்ற சைகோ வாலிபர்

சனி, 4 நவம்பர் 2017 (16:49 IST)
வேலூரைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் விக்னேஷ் ஐயங்கார் நாய்களை கொடூரமாக கொலை செய்வதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


 

 
செல்ல பிராணிகளை ஒருகூட்டம் கொலை செய்வது தொடர் கதையாகி வருகிறது. அதுவும் குறிப்பாக நாய்களை கொலை செய்வது அதிக அளவில் நடந்து வருகிறது. சென்னையில் முன்பு மருத்துவ கல்லூரி மாணவர்கள் இரண்டு பேர் நாயை மாடியில் இருந்து தூக்கி வீசிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
 
அதேபோன்று தற்போது வேலூரைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் விக்னேஷ் என்பவர் மீது நாய் குட்டியை கொடூரமாக கொலை செய்ததற்காக காட்பாடி காவல் நிலையத்தில் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
விலங்குகள் நல ஆர்வலர் ஷரவான் கிருஷ்ணன் என்பவர்  விக்னேஷ் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். விக்னேஷ் படிக்கும் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் இவருடன் தொடர்பு கொண்ட பின் விக்னேஷ் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
 
விக்னேஷ் அவர் வீட்டு பக்கம் சென்ற நாய் குட்டி ஒன்றை மாடியிலிருந்து தூக்கி வீசியுள்ளார். அந்த குட்டி நாயை வளர்த்து வந்தவர் இதுகுறித்து கேள்விப்பட்டவுடன் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதன்பின், விக்னேஷ் இதுபோன்று நாயை கொலை செய்தது முதல்முறையல்ல என்பது தெரியவந்துள்ளது.
 
விக்னேஷ் தொடர்ச்சியாக இதுபோன்று நாய்களை கொலை செய்து வந்துள்ளார். அதை வெளிப்படையாக வாட்ஸப்பிலும் பதிவிட்டுள்ளார். குட்டி நாயை தூக்கிப்போட்டு கொலை செய்தது குறித்து கேட்தற்கு, அது என் சட்டையை நாசம் செய்துவிட்டது என கூலாக பதில் அளித்துள்ளார்.
 
இதையடுத்து கல்லூரி மாணவர்கள் சிலர் ஷரவான் கிருஷ்ணனுடன் தொடர்பு கொண்ட பின் விக்னேஷ் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு அவர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்