இதில் மாதப்பனுக்கு திருமணமாகி வரலட்சுமி என்ற மனைவி உள்ளார். மாதப்பன் கட்டிட தொழில் செய்து வருகிறார். அவரது தம்பி நாகராஜ் கார்பெண்டர். நாகராஜ்ஜிக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இதனால் அடிக்கடி நாகராஜுக்கும், மாதப்பன் மனைவி வரலட்சுமிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நாகராஜ் குடித்துவிட்டு அவரது அண்ணி வரலட்சுமியின் கையை பிடித்து இழுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரத்தில் இருந்த மாதப்பன் நேற்று காலை நாகராஜை சரமாரியாக கத்தியால் குத்தினார். இதனால் ரத்த வெள்ளத்தில் நாகராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர், மாதப்பன் சூளகிரி போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.