அண்ணனுக்கும் தங்கைக்கும் திருமணம்: சென்னையில் நடந்த கொடுமை

செவ்வாய், 16 ஆகஸ்ட் 2016 (08:28 IST)
சென்னை, எண்ணூர் பாரதியார் நகரை சேர்ந்தவர் ரவி (45), கூலி தொழிலாளி. இவரது மனைவி சாந்தி (42), பொம்மை வியாபாரம் செய்கிறார்.


 


இவர்களுக்கு 19 வயதிலும் 17 வயதிலும் 2 மகள்கள் உள்ளார்கள். மூத்த மகள், தி.நகரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர், வேலை முடித்துவிட்டு மயிலாப்பூரில் உள்ள பெரியம்மா மாரியம்மாள் வீட்டுக்கு அடிக்கடி சென்று தங்குவது வழக்கம். இந்நிலையில், கடந்த 17 நாட்களுக்கு முன் வேலைக்கு சென்ற கவிதா வீடு திரும்பவில்லை. மயிலாப்பூரில் வசித்து வரும் மாரியம்மாள் வீட்டில் இருந்து சாந்திக்கு தொலைபேசியில் பேசிய அவரது உறவினர் ஒருவர், ''உனது மகளுக்கும் மாரியம்மாள் மகன் தீனதயாளனுக்கும் (27) திருமணம் செய்துள்ளோம்'' என கூறி தொடர்பை துண்டித்துள்ளார். உறவு முறை மாறி திருமணம் செய்து வைத்ததை கேட்டு அதிர்ச்சியடைந்த சாந்தி அலறியடித்து கொண்டு மயிலாப்பூரில் உள்ள மாரியம்மாள் வீட்டுக்கு சென்றுள்ளார்.

அப்போது, அங்கிருந்தவர்கள் சாந்தியை வீட்டுக்குள் விடாமலும், மகளை பார்க்க விடாமலும் அடித்து அனுப்பியள்ளனர். இதையடுத்து மயிலாப்பூர் காவல்நிலையத்தில் புகார் கொடுக்க சென்றார். அங்கிருந்த போலீசார் 'நீங்கள் எண்ணூரில் தான் புகார் கொடுக்க வேண்டும்' என கூறி திருப்பி அனுப்பி உள்ளனர். இதனால் சாந்தி எண்ணூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட எஸ்ஐ, ஒருவாரத்துக்கு பின்பு, ’நீங்கள் மயிலாப்பூர் காவல்நிலையத்தில் புகார் கொடுங்கள்' என கூறி உள்ளார்.  தன் மகளின் நிலையை என்வென்று தெரியாமல் சாந்தி மிகவும் மன வேதனையில் உள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்