சரி போனஸ்தான் இல்லை என்றால் தீபாவளிப் பண்டிகைக்கு விடுமுறையும் இல்லை என்ற நிலைமைக்கு ஆளாகியுள்ளனர் போலிஸார். முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழா மற்றும் ஜெயந்தி விழா வரும் 28, 29 மற்றும் 30ஆம் தேதிகளில் நடக்க உள்ளது. இதை ஒட்டி 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் போலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.