தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில், கட்சிகள் வலுவான கூட்டணி அமைப்பதில் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. இடதுசாரி கட்சிகள் மதிமுக, விடுதலை சிறுத்தைகள் ஆகியவை குறைந்தபட்ச செயல் திட்டத்தின் அடிப்படையில், மக்கள் நல கூட்டணியை ஏற்படுத்தி உள்ளனர்.
பாமகவோ திமுக, அதிமுக தவிர மற்ற அனைத்துக் கட்சிகளும், அன்புமணி ராமதாஸை முதல்வராக ஏற்றுக்கொண்டால் கூட்டணிக்கு வரலாம் என்று அழைப்பு விடுத்திருக்கின்றன. முக்கிய கட்சிகளான திமுகவும், அதிமுகவும் கூட்டணி குறித்து எந்த முடிவையும் அறிவிக்காமல் உள்ளன.
இந்நிலையில், கூட்டணி குறித்து ட்விட்டரில் தெரிவித்துள்ள சுப்பிரமணிய சாமி, “கருணாநிதி முதலமைச்சர் வேட்பாளராக ஸ்டாலினை அறிவிப்பார் என்று நம்புகிறேன். அதன்பிறகு, பாஜகவுடன் ஸ்டாலின் மற்றும் விஜயகாந்த் இணைந்து புதிய கூட்டணி உருவாகும்” என்று கூறியுள்ளார்.