என்ன வேணும்னு கேட்ட பிரதமர்; பெள்ளி கேட்டது என்ன தெரியுமா?

Webdunia
ஞாயிறு, 9 ஏப்ரல் 2023 (15:44 IST)
இன்று யானை பராமரிப்பாளர்கள் பொம்மன், பெள்ளியை பிரதமர் மோடி சந்தித்த நிலையில் அவர்கள் வைத்த கோரிக்கை பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

சமீபத்தில் நடந்த ஆஸ்கர் விருது விழாவில் முதுமலையை சேர்ந்த யானை குட்டிகளை வளர்க்கும் பொம்மன், பெள்ளி தம்பதிகளின் வாழ்க்கை குறித்து எடுக்கப்பட்ட ‘தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்’ ஆவண குறும்படம் ஆஸ்கர் வென்றது. அதை தொடர்ந்து நேற்று தமிழ்நாடு வந்த பிரதமர் மோடி இன்று முதுமலை சென்று பொம்மன், பெள்ளி தம்பதியரை நேரில் சந்தித்து பேசினார்.

அவர்களோடு சென்று யானைக்குட்டிகளையும் பார்வையிட்டார். அப்போது பெள்ளி அம்மாளிடம் “உங்களுக்கு என்ன தேவையென்றாலும் என்னிடம் கேளுங்கள்” என பிரதமர் கேட்டுள்ளார். அதற்கு பெள்ளி அம்மாள், தங்கள் ஊர்ப்பகுதியில் குழந்தைகளுக்கு பள்ளிக்கூடமும், நல்ல சாலையும் அமைத்து தரும்படி கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரதமரிடம் தங்களுக்கென எதுவும் கேட்காமல் பள்ளிக்கூடம், சாலை என மக்களுக்காக அவர் விடுத்த வேண்டுகோள் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்