குட்டிகளுடன் கிராமத்திற்குள் புகுந்த கரடி: மாடு மேய்த்துக் கொண்டிருந்தவரை தாக்கியது

திங்கள், 5 அக்டோபர் 2015 (15:05 IST)
கிருஷ்ணகிரி மாவட்டம் வனப் பகுதிக்கு அருகிலுள்ள கிராமத்தில் குட்டிகளுடன் புகுந்த கரடி ஒருவரை தாக்கியதால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
 
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள, வனப் பகுதியை ஒட்டியுள்ள ஏகல்நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். இவர் அங்கு மாடு மேய்த்துக் கொண்டிருந்தார்.
 
அப்போது, இரண்டு குட்டிகளுடன் வந்த ஒரு கரடி ஈஸ்வரனைத் தாக்கியது. இந்தத் தாக்குதலால் படுகாயமடைந்த ஈஸ்வரன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
 
இந்நிலையில், இந்த வனப் பகுதியில் இருந்து கரடி மட்டுமன்றி யானைகள், காட்டு எருமைகள் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகளும் ஊருக்குள் அவ்வப்போது புகுந்து விடுதாக கிராம மக்கள் அச்சத்துடன் தெரிவித்துள்ளனர்.
 
இதனால், வன விலங்குகளின் அச்சுறுத்தலில் இருந்து தங்களை காப்பாற்ற, வன துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்