வங்க கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு நிலை! – வானிலை ஆய்வு மையம்!

புதன், 27 அக்டோபர் 2021 (12:48 IST)
வங்க கடலில் தற்போது புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை தமிழகம் நோக்கி வரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வெப்பசலனம், தென்மேற்கு பருவக்காற்று ஆகியவற்றால் சில இடங்களில் கனமழை பெய்து வந்தது. இந்நிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தற்போது வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. தென் வங்க கடலின் மையப்பகுதியில் உருவாகியுள்ள இந்த காற்றழுத்த தாழ்வு நிலை 3 நாட்களில் தமிழகம் நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்