கரூர் அருகே தனியார் பள்ளி மாணவர்கள் கின்னஸ் சாதனை

சனி, 30 ஜூலை 2016 (17:21 IST)
குடியரசு முன்னாள் தலைவர் டாக்டர் அப்துல்கலாமின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி பெண்குழந்தைகள் தற்காப்பு வழிப்புணர்வு கின்னஸ் உலக சாதனை நிகழ்த்தும் நிகழ்ச்சி பள்ளி வாளகத்தில் நடைபெற்றது.


 

சர்வதேச ரோட்டரி மாவட்டம் 3000, பரணி பார்க் சாரணர் மாவட்டம் ஆகியவற்றின் சார்பில் உலகின் மிகப்பெரிய டேக்வாண்டோ செயல்விளக்கம் நடைபெற்றது. இதில் தற்காப்பு கலை பயிற்சி பெற்றுவரும் சாரணர்கள், சாரணியர், குருளையர் மற்றும் நீலப்பாறைவகள் என 850 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சி 15 நிமிடம் நடைபெற்றது. இதில் உலக சாதனை நிகழ்த்தியதற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

இவ்விழாவிற்கு சர்வதேச ரோட்டரி கிளப்பின் ஆளுநர் எம்.முருகானந்தம் தலைமை வகித்தார். பரணி பார்க் சாரணர் மாவட்டத்தின் முதன்மை ஆணையர் எஸ்.மோகனரெங்கன் வரவேற்று பேசினார். கரூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி முன்னிலை வகித்தார். சர்வதேச ரோட்டரி பயிற்றுனர் எஸ்.ராஜேந்திரன், ஆளநர் தேர்வு பி.கோபலகிருஷ்ணன், பரணி பார்க் சாரணர் மாவட்ட ஆணையர் பத்மாவதிமோரகன ரெங்கன், மாவட்ட ஆணையர் டாக்டர் சி.ராமசுப்பிரமணியன், ராணுவப்பள்ளி முதல்வர் ஸ்ரீதர் ஆகியேர் விழாவில் பேசினர்.

சர்வதேச ரோட்டரி துணை ஆளுநர் வி.எஸ்.பாஸ்கரன் நன்றி கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்