‘சுபிக்‌ஷா’ நிறுவன உரிமையாளரின் சொத்துகள் பறிமுதல்

வியாழன், 24 மார்ச் 2016 (14:57 IST)
சுபிக்‌ஷா நிறுவன உரிமையாளர் சுப்பிரமணியனின் சொத்துகள் பறிமுதல் செய்யபட்டுள்ளதாக வங்கிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
 

 
‘சுபிக்ஷா’ என்ற பெயரில் 1600க்கும் மேற்பட்ட பல்பொருள் வர்த்தக நிறுவனம் நடத்திவரும் சுப்பிரமணியன், பேங்க் ஆஃப் பரோடா வங்கியிடம் இருந்து, ரூ. 77 கோடி ரூபாயை கடன் தொகையாகப் பெற்றுள்ளார். ஆனால், அந்த தொகையை திருப்பிச் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.
 
இது தொடர்பான விசாரணையில், சுப்பிரமணியன் பரோடா வங் கிக்குச் செலுத்தவேண்டிய கடன்தொகையை சட்டவிரோதமாகப் பயன் படுத்தி, சொத்துகள் வாங்கியதாக, அமலாக்கத்துறை விசாரணையில் தெரிய வந்தது.
 
இதையடுத்து, சுப்பிரமணியன் வாங்கிய விவசாய நிலம் மற்றும் காலிமனைகளை அமலாக்கத்துறையினர் ஏற்கெனவே பறிமுதல் செய்தனர். தற்போது மரக்காணம் மற்றும் சென்னை நீலாங்கரையில் சுப்பிரமணியன் பெயரில், வாங்கப்பட்ட வீடுகளையும் அமலாக்கத்துறையினர் கையகப்படுத்தி உள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்