பிரபல நிறுவனத்தின் நெல்லிச்சாறு விற்பனைக்கு தடை

திங்கள், 21 செப்டம்பர் 2015 (05:59 IST)
பிரபல நெல்லிச்சாறு தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பு தரமற்றது என கூறி, அந்நிறுவன நெல்லிச்சாறு விற்பனைக்கு சேலம் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
 

 
இது குறித்து, சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் அனுராதா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
சேலம், வின் ஸ்டார் டிரேடர்ஸ் சார்பில் நெல்லிச்சாறு தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது. இந்த நெல்லிச்சாறு நிறுவனம் குறித்து, பல்வேறு புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தது.
 
இதனால், கடந்த, ஆகஸ்ட் 13ஆம் தேதி இந்த நிறுனத்திற்கு நேரடியாக சென்று ஆய்வு நடத்தினோம். இதில், நெல்லிச்சாறு மாதிரி எடுக்கப்பட்டு பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆய்வில், 'நெல்லிச்சாறு உணவு பாதுகாப்பற்றது என்றும் தரம் குறைவானது என்றும் கண்டறியப்பட்டது.
 
இதனையடுத்து, நெல்லிச்சாறு தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு, அந்த நிறுவனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார்.
 
மேலும், இந்த நிறுவனம் குறைகளை நிவர்த்தி செய்ய 15 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
 
முயற்கை உணவு என விரும்பி பலரும் நெல்லிச்சாறு பயன்படுத்தி வரும் நிலையில், அந்த நெல்லிச்சாறு தயாரிப்புகள் தரம் குறைந்ததவை என வெளியான தகவலால் பொது  மக்கள் பெரிதும் அச்சம் அடைந்துள்ளனர். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்