சென்னையில், மாஞ்சா நூல் காற்றாடிக்கு தடை: போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் அறிவிப்பு

வியாழன், 8 அக்டோபர் 2015 (05:33 IST)
சென்னையில், மாஞ்சா நூல் காற்றாடி தடை செய்யப்பட்டுள்ளதாக, சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் அறிவித்துள்ளார்.
 

 
இது குறித்து, சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
மாஞ்சா நூல் காற்றாடியால், மனிதர்களுக்கு மட்டும் அல்லாமல், பறவைகள், விலங்குகளுக்கு கூட ஆபத்து ஏற்படலாம். எனவே,  சென்னையில் மாஞ்சா நூல் மற்றும் ரசாயன கலவை தடவப்பட்ட நைலான் நூல் மூலம் காற்றாடி பறக்க தடை விதிக்கப்படுகிறது.
 
மேலும், மாஞ்சா நூல் தயாரிப்பு, மாஞ்சா நூல் விற்பனை, மாஞ்சா நூலை பதுக்கி வைப்பது போன்றவைகளும் தடை செய்யப்பட்டுள்ளது என்றார்.
 
சென்னை அருகே உள்ள பெரம்பூரில், கடந்த சில நாட்களுக்கு முன்பு  காற்றாடி மாஞ்சா நூல் கழுத்தை அறுத்து 5 வயது சிறுவன்  இறந்து போனார். இந்த துயரம் தாங்காமல், அவரது தாயாரும் தற்கொலைக்கு முயன்றார். இதன் காரணமாகவே, மாஞ்சா நூல் காற்றாடிக்கு காவல்துறை தடை விதித்துள்ளது.
 
மேலும், சென்னையில், கடந்த 3 ஆண்டுகளில் காற்றாடி மாஞ்சா நூல் கழுத்தை அறுத்து 4 பேர் இறந்துள்ளனர். பலர் காயம் அடைந்துள்ளனர். இதனால், கடந்த 2013ஆம்ம ஆண்டில் 37 வழக்குகளும், 2014 ஆம் ஆண்டில் 35 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்த ஆண்டு இதுவரை சுமார் 190 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்