பி.எட். மாணவர்கள் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகள்: உயர்கல்வித்துறை வெளியீடு!

வியாழன், 22 செப்டம்பர் 2022 (18:52 IST)
பி.எட். மாணவர்கள் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகள்: உயர்கல்வித்துறை வெளியீடு!
பிஎட் மாணவர்கள் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை உயர்கல்வித்துறை சற்றுமுன் வெளியிட்டுள்ளது. 
 
அனைத்து கல்லூரிகளிலும் 69 சதவீத இட ஒதுக்கீடு கட்டாயம் செய்யப்பட வேண்டும் என்றும் இணையதளம் வாயிலாக மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் வழிகாட்டு நெறிமுறைகளில் அறிவிக்கப்பட்டுள்ளது
 
மேலும் சான்றிதழ் சரிபார்ப்பின் போது அசல் சான்றிதழ் கட்டாயம் மாணவர்கள் கொண்டுவரவேண்டும் என்றும் அரசு அல்லது அரசு உதவி பெறும் கல்லூரிகளில் சேர http://tngasaedu.in/ என்ற இணையதளத்தை அணுகலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும் தனியார் கல்லூரிகளில் சேர அந்தந்த கல்லூரியின் இணையதளத்தை அணுகலாம் என்றும் வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள.
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்