செய்தியாளர்களை விரட்டியடித்த அழகிரியின் ஆதரவாளர்கள்: அமைதிப்பேரணி என்ன ஆகும்?

Webdunia
புதன், 29 ஆகஸ்ட் 2018 (13:38 IST)
திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு பின்னர் அழகிரியின் வீட்டில் ஆதரவாளர்கள் வரும் எண்ணிக்கை பெருமளவு குறைந்துவிட்டதாக நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது. இதனால் கடும் ஆத்திரம் அடைந்த அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர்கள், தனது வீட்டின் முன்னே செய்தி சேகரிக்க நின்றிருந்த செய்தியாளர்களை விரட்டினர்.

வரும் செப்டம்பர் 5ஆம் தேதி சென்னையில் அமைதிப்பேரணி நடத்த போவதாக அறிவித்துள்ள அழகிரி, இந்த பேரணி மக்களிடம் சென்று சேர வேண்டும் என்றால் பத்திரிகையாளர்களின் ஒத்துழைப்பு தேவை என்ற எண்ணம் கூட இல்லாம செய்தியாளர்களை விரட்டியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

மேலும் அமைதிப்பேரணி குறித்த ஆலோசனையில் அழகிரி ஈடுபட்டிருக்கும்போது பத்துக்கும் குறைவான ஆதரவாளர்களே இருந்தனர் என்ற செய்தி வெளியானது. இந்த நிலையில் அமைதிப்பேரணியில் ஒரு லட்சம் பேர் பங்கேற்பாளர்கள் என்று அழகிரி கூறியது எந்த அளவுக்கு சாத்தியம்? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்