இலவசமாக பயணிகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோ டிரைவர்

புதன், 27 ஜூலை 2016 (15:39 IST)
சென்னையை  சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர், இலவசமாக பயணிகளை ஏற்றிச் சென்று அப்துல்கலாமிற்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.


 
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது மனதிலும் நிறைந்த அப்துல்கலாமுக்கு அனைவரும் இதய அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் தேனாம்பேட்டையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் கலையரசன், அப்துல்கலாமுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று ஒருநாள் மட்டும் தனது ஆட்டோவில் பயணிகளை இலவசமாக சவாரி ஏற்றிச் செல்கிறார். இது தொடர்பான துண்டு பிரசுரத்தை தனது ஆட்டோவில் அவர் ஒட்டி இருக்கிறார். அதில்,

“நான் விட்டுச்சென்ற பணியை தொடருங்கள் மாணவ செல்வங்களே!!

- டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்.

27.7.2016 இன்று ஒரு நாள் மட்டும் ஆட்டோவில் இலவசமாக பயணியுங்கள்”

இந்த ஆட்டோ டிரைவர், கடந்த ஆண்டு, அப்துல் கலாம் மறைந்த போதும் இதே போல் பயணிகளை இலவசமாக ஏற்றிச்சென்று அஞ்சலி செலுத்தினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்