மீட்டருக்கு மேல் வசூலித்த ஆட்டோக்கள் சிறைபிடிப்பு

புதன், 3 ஆகஸ்ட் 2016 (18:36 IST)
ஆட்டோக்களில் அதிக கட்டணம் வசூலிப்பது மற்றும் மீட்டர் இயக்கப்படாமல் இருப்பது போன்ற புகார்கள் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையில் 100 ஆட்டோக்களுக்கு குற்ற அறிக்கை வழங்கப்பட்டது. 10 ஆட்டோக்கள் சிறைபிடிக்கப்பட்டது.


 

 
சென்னையில் ஆட்டோக்கள் மீட்டர் பொறுத்தப்பட்டு அதன்படி கட்டன வசூலிக்க வேண்டும் என்று அரசு ஆணையுள்ளது. ஆனால் அதை யாரும் பின்பற்றுவதில்லை.
 
இந்நிலையில் உயர் நீதிமன்றம் உத்தரவை அமல்படுத்தும் வகையில் போக்குவரத்து ஆணையர் மற்றும் இணை ஆணையர் உத்தரவின்படி சென்னையில் சோதனை நடைப்பெற்றது.
 
இதில் அதிக கட்டணம் வசூலிப்பது, மீட்டர் இயக்கப்படாமல் இருந்தது, ஓட்டுனர் உரிமம் இல்லாமல் இருப்பது, அனுமதி சான்று மற்றும் தகுதி சான்று இல்லாமல் இருப்பது உள்ளிட பல்வேறு காரணங்களுக்காக நடவடிக்கை எடுக்கப்பட்டது.
 
கடந்த 2 நாட்களாக நடைப்பெற்ற சோதனையில் 100 ஆட்டோக்களுக்கு குற்ற அறிக்கை வழங்கப்பட்டது, 10 ஆட்டோக்கள் சிறைபிடிக்கப்பட்டன.
 
மேலும் ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக பொதுமக்கள் புகார் செய்ய வசதியாக அனைத்து ஆட்டோக்களிலும் கட்டணமில்லா தொலைப்பேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்