ரவுடி அட்டாக் பாண்டி கைது: காவல்துறைக்கு ஜெயலலிதா பாராட்டு

புதன், 23 செப்டம்பர் 2015 (00:05 IST)
இரண்டு வருடத்திற்கும் மேல் தலைமறைவாக இருந்த மதுரை பிரபல ரவுடி அட்டாக் பாண்டியை கைது செய்த தமிழக காவல்துறைக்கு சட்டப் பேரவையில் முதல்வர் ஜெயலலிதா பாராட்டு தெரிவித்தார்.
 

 
சட்டப் பேரவையில் காவல்துறை தீயணைப்பு மீட்பு பணிகள் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதன் மீது உறுப்பினர்கள் பேசியதற்கு பதில் அளித்து முதலமைச்சர் ஜெயலலிதா பேசுகையில்:–
 
கடந்த 31.1.2013 அன்று திமுகவை சேர்ந்த பொட்டு சுரேஷ் காரில் சென்ற போது அவரது காரை வழிமறித்த சிலர் அவரை படுகொலை செய்தனர். இது குறித்து, சுப்பிரமணியபுரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து எதிரிகளை கைது செய்தனர்.
 
இதில் முக்கிய குற்றவாளியான பாண்டி என்ற அட்டாக் பாண்டி தலைமறைவாக இருந்தார். 7 பிடிவாரண்ட் உள்ள அவரை தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்தது.
 
இந்த நிலையில், மும்பை புறநகர் பகுதியில் பதுங்கி இருந்த அட்டாக் பாண்டியை  தமிழக காவல்துறையினர் சுற்றிவளைத்து கைது செய்தனர். அட்டாக் பாண்டியை கைது செய்த தமிழக காவல்துறையினரின் பணி பாராட்டுக்குரியது என்று மனதார பாராட்டினார். தமிழக காவல்துறையினர் ஸ்காட்லாந்து காவல்துறைக்கு இணையாக செயல்படுவதாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் ஏற்கனவே, பாராட்டிள்ளது குறிப்பிடதக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்