யார் இந்த அர்ஜுனா மூர்த்தி என ஊடகங்கள் தேடிய நிலையில் அவர் பாஜகவின் அறிவுசார் பிரிவின் மாநில தலைவர் என்பது தெரிய வந்தது. ஆனால் அர்ஜுனா மூர்த்தி தான் ரஜினிகாந்த் கட்சியின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பின் உடனே தனது டுவிட்டரில் தலைவருடன் நான் என்று மாற்றிக் கொண்டதோடு தனது ராஜினாமா கடிதத்தையும் பாஜகவுக்கு அனுப்பிவிட்டார்