உடல் நலக்குறைபாடு காரணமாக முதல்வர் ஜெயலலிதா கடந்த 44 நாட்களாக, அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடைசியாக அப்பல்லோ நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், அவருக்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து வருவது தெரிய வந்தது.
இந்நிலையில் முதல்வர் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும், மூச்சுத்திணறல் காரணமாக அவருக்கு வைக்கப்பட்டிருந்த சுவாச கருவிகள் அகற்றப்பட்டிருப்பதாகவும், தற்போது அவர் இயல்பாக சுவாசிக்கிறார் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளது.
ஆனால், அப்பல்லோ தரப்பில் இருந்து எந்த அறிக்கையும் வெளியாகவில்லை. இந்நிலையில், அப்பல்லோ நிர்வாக தலைவர் பிரதாப் ரெட்டி இன்று செய்தியாளர்களிடம் ஜெயலலிதாவின் உடல் நிலை பற்றி சில கருத்துகளை தெரிவித்தார்.