தமிழகத்தில் பாஜக முன்னாள் தலைவராகப் பொறுப்பு வகித்த எல்,முருகன் மத்திய அமைச்சரவையில் மீன்வளம், கால்நடை, பால்வளத்துறை, மற்றும் தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சராகப் பதவியேற்றார். அதனால் அவரின் பதவி காலியாக தமிழக பாஜக துணைத் தலைவராக இருன்ய்ஹ முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை தலைவராக நியமிக்கப்பட்டார். கட்சியில் பல சீனியர்கள் இருந்தும் அண்ணாமலைக்கு அந்த பதவி வழங்கப்பட்டது அனைவருக்கும் ஆச்சர்யத்தை அளித்தது.
இந்நிலையில் இன்று அண்ணாமலை தமிழக பாஜகவின் தலைவராக பதவி ஏற்றுக்கொள்ள உள்ளார்.