2 அமைச்சர்கள் மீது ஊழல் பட்டியல்; விரைவில் வெளியிடுவேன்! – அண்ணாமலையால் அதிர்ச்சி!
ஞாயிறு, 29 மே 2022 (14:58 IST)
மத்திய அரசு குறித்து தவறான தகவல்களை திமுக அளிப்பதாக கண்டித்து தமிழக பாஜக போராட்டம் நடத்த உள்ளது.
சமீபத்தில் பிரதமர் மோடி நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைக்க தமிழகம் வந்தார். அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிதி, வரி உள்ளிட்டவை குறித்து பேசினார்.
இந்நிலையில் பிரதமர் மோடியை அவமதிக்கும் விதமாக திமுக நடந்து கொண்டதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்தார். மேலும் மத்திய அரசு குறித்த தவறான தகவல்களை திமுக வெளியிடுவதாக அதை கண்டித்து 31ம் தேதியன்றி வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்த உள்ளதாக பாஜக அறிவித்துள்ளது.
இந்நிலையில் திமுக அமைச்சர்கள் 2 பேர் செய்த ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து தன்னிடம் ஆதாரங்கள் உள்ளதாகவும், அதை அடுத்த வாரம் வெளியிட உள்ளதாகவும் அண்ணாமலை பேசியுள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.