ஆ ராசாவை கண்டிக்க திறனற்ற திமுக அரசு: அண்ணாமலை கண்டனம்

Webdunia
புதன், 21 செப்டம்பர் 2022 (10:38 IST)
இந்து மதத்தை தொடர்ச்சியாக அவதூறாக பேசி வரும் ஆ ராசாவை கண்டிக்க திறனற்ற திமுக அரசு பாஜகவினர் மீது காவல்துறையை ஏவி வருகிறது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்
 
கோவையைச் சேர்ந்த பாஜக பிரமுகர் உத்தம ராமசாமி, ஆ ராசா குறித்து அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து கண்டனத்தை தெரிவித்துள்ள அண்ணாமலை ஹிந்துக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசி வரும் திமுக பாராளுமன்ற உறுப்பினர் ஆ ராசாவை இந்த திறனற்ற திமுக அரசு கண்டிக்கவும் இல்லை கைது செய்யவும் இல்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் பாஜகவினர் ஏதாவது பேசினால் உடனடியாக கைது செய்து வருகிறது என்றும் கூறியுள்ளார் 
 
கோவை மாவட்ட பாஜக தலைவரின் கைதை கண்டித்து பாஜக வினர் தற்போது கோவையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்