முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் திமுக அரசு கேரளாவுக்கு சாதகமாகவும், தமிழக மக்களுக்கு எதிராகவும் செயல்படுவதாக கூறி அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தன. அந்த வகையில் இன்று தேனியில் பாஜக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கலந்துக் கொண்டார்.
பின்னர் ட்விட்டரில் பதிவிட்ட அவர் “முல்லைப் பெரியாறு விசயத்தில் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை, அரசியல் லாபத்திற்காக சமரசம் செய்த முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை கண்டித்து போராட்டம்! தாமரையை சொந்தங்களான தேனி மக்கள் திரள பென்னிகுக்கின் தியாகத்தை ஏளனம் செய்த தமிழக முதல்வரையும், கேரள முதல்வரையும் நம் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்” என்று தெரிவித்துள்ளார்.