முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் சோதனைக்கு இதுதான் காரணம்: அண்ணாமலை

புதன், 14 செப்டம்பர் 2022 (07:59 IST)
முன்னாள் அதிமுக அமைச்சர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை செய்வதற்கும் திமுக ஆட்சி மேல் மக்களின் அவநம்பிக்கையை திசை திருப்புவது ஒன்றே காரணம் என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இது குறித்து அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
 
திமுக ஆட்சியின் மேல் மக்களின் அவநம்பிக்கை அதிகரித்து வருவதை திசை திருப்பும் வகையில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ச்சியாக சோதனை மேற்கொண்டு வருவதை பாஜக வன்மையாகக் கண்டிக்கிறது.
 
இதற்கு முன்னர் செய்த சோதனைக்கே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாமலிருக்கும்போது புது சோதனைகளின் அடிப்படை நோக்கம் என்ன ?
திமுக அமைச்சர்கள் மீது குவியும் ஊழல் புகார்களை இருட்டடிப்பு செய்ய அரசு இயந்திரங்களை ஏவல் இயந்திரங்களாக மாற்றி இருக்கிறது இந்த திறனற்ற திமுக அரசு என்று அந்தப் பதிவுகளில் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்